2025
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 2025 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 2025 MMXXV |
| திருவள்ளுவர் ஆண்டு | 2056 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2778 |
| அர்மீனிய நாட்காட்டி | 1474 ԹՎ ՌՆՀԴ |
| சீன நாட்காட்டி | 4721-4722 |
| எபிரேய நாட்காட்டி | 5784-5785 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2080-2081 1947-1948 5126-5127 |
| இரானிய நாட்காட்டி | 1403-1404 |
| இசுலாமிய நாட்காட்டி | 1446 – 1447 |
| சப்பானிய நாட்காட்டி | Heisei 37 (平成37年) |
| வட கொரிய நாட்காட்டி | 114 |
| ரூனிக் நாட்காட்டி | 2275 |
| யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
| கொரிய நாட்காட்டி | 4358 |
2025 ஆம் ஆண்டு (MMXXV) கிரிகோரியின் நாட்காட்டியின்படி புதன்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டாகும். இது பொ.ஊ. 2025-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது மூன்றாம் ஆயிரவாண்டின் 25-ஆவது ஆண்டும், 21-ஆம் நூற்றாண்டின் 25-ஆவது ஆண்டும், 2020களின் ஆறாவது ஆண்டும் ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]சனவரி
[தொகு]- சனவரி 1
- ஐரோப்பிய ஒன்றியப் பேரவையின் தலைமைப் பொறுப்பை அங்கேரிக்குப் பின்னர் போலந்து எடுத்துக் கொண்டது.[1]
- பல்காரியாவும், உருமேனியாவும் செங்கன் பகுதியில் இணைவதற்கான செயல்முறையை முடித்து, நில எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கின.[2]
- ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய 37-ஆவது நாடாக லீக்கின்ஸ்டைன் மாறியது.[3]
- சனவரி 6
- இந்தோனேசியா பிரிக்சு அமைப்பின் 10-ஆவது உறுப்பினராக இணைந்தது.[4][5]
- சனவரி 7
- 7.1 அளவு நிலநடுக்கம் திபெத்தைத் தாக்கியதில், 126 பேர் உயிரிழந்தனர்.[6]
- லாசு ஏஞ்சலசில் அதன் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான, பலத்த காற்று மற்றும் நீடித்த வறட்சி நிலைமைகளால் தூண்டப்பட்ட காட்டுத்தீ பரவியதில், ஆயிரக்கணக்கான கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. ஏழு இறப்புகள் பதிவாகின.[7]
- சனவரி 10 – 2024 ஆம் ஆண்டு, உலக வரலாற்றில் மிகவும் சூடான ஆண்டு என ஐரோப்பிய கோர்ப்பனிக்கசு காலநிலை மாற்ற சேவை நிறுவனம் அறிவித்தது.[8]
- சனவரி 15 – இசுரேல்-ஹமாஸ் போர்: இசுரேலும் அமாசும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இசுரேலிய - பாலத்தீனப் பணயக்கைதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், பன்னாட்டு உதவியை அனுமதிப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தன.[9]
- சனவரி 19 – இசுரேல்-ஹமாஸ் போர்: போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.[10]
- சனவரி 21 – துருக்கியில் உணவு விடுதி ஒன்றில் தீப்பிடித்ததில், 78 பேர் உயிரிழந்தனர்.[11]
- சனவரி 22 – தாய்லாந்து 38-ஆவது நாடாகவும், தென்கிழக்காசியாவில் முதல் நாடாகவும் ஒரு-பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.[12]
- சனவரி 29 – 64 பேருடன் சென்ற அமெரிக்காவின் ஈகிள் 5342 வானூர்தி, மூவருடன் சென்ற பிளாக் கோக் இராணுவ உலங்குவானூர்தியுடன் வாசிங்டன், டி. சி.யில் நடுவானில் மோதியதில், பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.[13][14]
- சனவரி 30 – அரசமைப்புச் சட்ட மாற்றங்களை அடுத்து, நிக்கராகுவா இரட்டை ஆட்சி முறைக்கு மாறியது. தானியேல் ஒர்ட்டேகா, ரொசாரியோ முரிலியோ இருவரும் அரசுத்தலைவர்களானார்கள்.[15]
பெப்ரவரி
[தொகு]- பெப்ரவரி 18
- உருசியாவும் ஐக்கிய அமெரிக்காவும் பண்ணுறவாண்மையை மீட்டெடுப்பதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டதாக விளாதிமிர் பூட்டின் அறிவித்தார்.[16]
- 1922-இல் கண்டுபிடிக்கப்பட்ட துட்டன்காமனின் கல்லறைக்குப் பிறகு, இரண்டாம் தூத்மோசின் கல்லறை இரண்டாவதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்து அறிவித்தது. இதன் மூலம் எகிப்தின் 18-ஆம் வம்சத்தைச் சேர்ந்த பார்வோன் கல்லறைகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[17][18]
மார்ச்சு
[தொகு]- மார்ச்சு 2 – பயர்ஃபிளை ஏரோஸ்பேசு தொழில்நுட்பச் சிக்கல்கள் இல்லாமல் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதல் வணிக நிறுவனமானது.[19][20]
- மார்ச்சு 5 – தார்பூரில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான ஆர்.எஸ்.எஃப் இயக்கத்தை ஆதரிப்பதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம், இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை மீறியதாகக் குற்றம் சாட்டி, சூடான் அனைத்துலக நீதிமன்றத்தில் அமீரகத்திற்கு எதிராக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.[21]
- மார்ச்சு 8 – பல ஆண்டுகளாக நாட்டின் மிக மோசமான வன்முறையாக விவரிக்கப்படும் அலவைதுப் பகுதியில் சிரிய இடைக்கால அரசுப் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட அடக்குமுறையில் பொதுமக்கள் உட்பட 1,000-இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.[22]
- மார்ச்சு 11 – மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் கைது ஆணையைப் பெற்ற பின்னர், பிலிப்பீன்சின் முன்னாள் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துதெர்த்தே பிலிப்ப்[ஈன்சில் கைது செய்யப்பட்டார்.[23]
- மார்ச்சு 13 – 16 – ஐக்கிய அமெரிக்காவில் மணிக்கு 170 மைல் வேகத்தில் காற்று வீசிய கடுமையான புயல்களாலும், குறைந்தது 92 சூறாவளிகளாலும், குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர்.[24]
- மார்ச்சு 16 – வடக்கு மக்கெதோனியாவின் கோச்சானியில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டனர், 155 பேர் காயமடைந்தனர்.[25]
- மார்ச்சு 18 – காசாக்கரையில் இசுரேல் பரவலான வான்வழி குண்டுவீச்சுகளையும் தாக்குதல்களையும் நடத்தி, குழந்தைகள் உட்பட குறைந்தது 591 பேரைக் கொன்றது, சனவரியில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.[26]
- மார்ச்சு 28 – மியான்மரில் 7. 7-அளவு நிலநடுக்க ஏற்பட்டதில் 5,413 பேர் உயிரிழந்தனர்.[27]
ஏப்ரல்
[தொகு]- ஏப்ரல் 1 – எசுபேசுஎக்சு பால்கன் 9 ஏவூர்தியில் ஏவப்பட்ட பிராம்2 விண்கலம், முனையப் பிற்போக்கு சுற்றுப்பாதையில் நுழைந்த முதல் மனித விண்வெளிப் பறப்பானது[28]
- ஏப்ரல் 8 – டொமினிக்கன் குடியரசு, சாந்தோ தொமிங்கோவில் நடைபெற்ற ரூபி பெரெசின் இசை நிகழ்ச்சியின் போது, ஒரு இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில், பெரெசு உட்படக் குறைந்தது 231 பேர் உயிரிழந்தனர்.[29]
- ஏப்ரல் 17 – 124 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கே2-18பி புறக்கோளின் வளிமண்டலத்தில் பூமியில், உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படும் இரண்டு சேர்மங்களான டைமெத்தில் சல்பைடு, டைமெத்தில் டைசல்பைடு அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது[30]
- ஏப்ரல் 22 – இந்தியாவின், சம்மு காசுமீரில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், சுற்றுலாப் பயணிகள் குழு மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர், 50-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[31]
மே
[தொகு]- மே 3:
- ஆத்திரேலியப் பொதுத் தேர்தலில் அந்தோனி அல்பனீசி தலைமையிலான தொழிற்கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.[32]
- 2025 சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: லாரன்சு வோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி அமோக வெற்றி பெற்று, ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது.[33]
- மே 6
- செருமனியின் பொதுத்தேர்தலில் பிரீத்ரிக் மெர்சு செருமனியின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[34]
- 2025 இந்தியா-பாக்கித்தான் முரண்பாடு: இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த பகல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாக்கித்தான் எல்லைக்குள் பல ஏவுகணைகளை இந்தியா ஏவியது.[35]
- மே 7 – பதினான்காம் லியோ புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[36]
- மே 12 – துருக்கியுடன் போர் நிறுத்தம் அறிவித்த பின்னர் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி கலைக்கப்படுவதாக அறிவித்தது.[37]
சூன்
[தொகு]- சூன் 1 – உருசிய இராணுவத் தளங்கள் மீது உக்ரைன் சிலந்திவலை நடவடிக்கை என்ற பெயரில் ஒரு பெரிய ஆளில்லா வான் தாக்குதலை நடத்தியது. உருசிய வான்படையின் 40-இற்கும் மேற்பட்ட வானூர்திகள் தாக்கப்பட்டன.[38]
- சூன் 12 – இலண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா 171 போயிங் 787 ட்ரீம்லைனர் வானூர்தி இந்தியாவில் அகமதாபாது நகரில் வீழ்ந்ததில் 229 பயணிகள், 12 பணியாளர்கள், தரையில் 19 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.[39][40]
- சூன் 13 – ஈரான்-இசுரேல் போர்: ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இசுரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி, ஒசைன் சலாமி உள்ளிட்ட இராணுவத் தளபதிகளைக் கொன்றது; ஈரான் பதிலடி கொடுத்தது.[41][42]
- சூன் 22 – ஈரான்-இசுரேல் போர்: அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது B-2 ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது[43]
- சூன் 23 – கத்தார், ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.[44]
- சூன் 25 – ஆக்சியம் 4 திட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் நான்கு விண்வெளி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர், இதில் பனிப்போர் முடிந்ததிலிருந்து போலந்து, இந்தியா (சுபான்சூ சுக்லா) நாடுகளைச் சேர்ந்த முதல் விண்வெளி வீரர்கள் அடங்குவர்.[45]
சூலை
[தொகு]- சூலை 4–7 – அமெரிக்கா, டெக்சசு மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் குறைந்தது 121 பேர் உயிரிழந்தனர்.[46]
- சூலை 23 – நாடுகள் பைங்குடில் வளிம வரலாற்று வெளியேற்றம், புவி சூடாதலின் விளைவுகள் தொடர்பாக ஒருவருக்கொருவர் வழக்குத் தொடரலாம் என்று அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[47]
- சூலை 24 – அங்காரா ஏர்லைன்சு வானூர்தி 2311 உருசியாவின் கிழக்கு சைபீரியாவில் வீழந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 41 பேரும் உயிரிழந்தனர்.[48]
- எல்லைப் பிரச்சினை அதிகரித்ததைத் தொடர்ந்து கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஆயுத மோதல்கள் வெடித்தன. மோதல்கள் காரணமாகக் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர். 100,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.[49]
- சூலை 30 – Mw 8.8 நிலநடுக்கம் உருசியாவின் கம்சாத்காவைத் தாக்கியதில், யப்பான், ஹவாய் ஆகிய இடங்களில் ஆழிப்பேரலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.[50]
ஆகத்து
[தொகு]- ஆகத்து 8 – ஆர்மீனியாவும் அசர்பைசானும் நாகோர்னோ-கராபக் பிரதேசம் தொடர்பான 37-ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.[51]
- ஆகத்து 15 – உக்ரைன் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்புக்கும் உருசியத் தலைவர் விளாதிமிர் பூத்தினுக்கும் இடையே ஏங்கரேசில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.[52]
- ஆகத்து 31 – கிழக்கு ஆப்கானித்தானில் குனார் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,200 பேர் உயிரிழந்தனர்.[53]
செப்டம்பர்
[தொகு]- செப்டம்பர் 8 – நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஒளி பதவி விலகினார்.[54]
- செப்டம்பர் 21 – ஐக்கிய இராச்சியம், கனடா, ஆத்திரேலியா ஆகியன பலத்தீனை சுதந்திர நாடாக அங்கீகரித்தன. அடுத்த நாள் பிரான்சும் அங்கீகரித்தது.[55][56]
அக்டோபர்
[தொகு]- அக்டோபர் 9 – காசா போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இசுரேலும் ஹமாசும் காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு ஒப்புக்கொண்டன, இது போர் நிறுத்தத்திற்கு வழி வகுத்தது.[57]
- அக்டோபர் 12 – மடகாசுக்கரில் தொடர் போராட்டங்களை அடுத்து, அரசுத்தலைவர் ஆண்ட்ரி ராசொய்லினா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[58]
- அக்டோபர் 13 – காசா போர்: ஹமாஸ் 20 இசுரேலியப் பணயக் கைதிகளை விடுதலை செய்தது. பதிலாக, இசுரேல் 250 பலத்தீனக் கைதிகளை விடுதலை செய்தது.[59]
நவம்பர்
[தொகு]- நவம்பர் 17 – வங்காலதேசத்தின் முன்னாள் பிரதமர் சேக் அசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வங்காளதேச தீர்ப்பாயத்தால் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அவர் சமூகமளிக்காமலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டார்.[60]
- நவம்பர் 25 – ஐக்கிய நாடுகள் அவையால் வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கை, இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா, 42 மில்லியன் மக்கள்தொகையுடன், சப்பானியத் தலைநகர் டோக்கியோவை விஞ்சி உலகின் மிகப்பெரிய நகரமாக உயர்ந்துள்ளது என்பதைக் காட்டியது.[61]
- நவம்பர் 28 – தித்வா புயல் இலங்கையைத் தாக்கியதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும், நிலச்சரிவுகளினாலும் குறைந்தது 647 பேர் உயிரிழந்தனர், 181 பேர் காணாமல் போயினர்.[62]
திசம்பர்
[தொகு]- திசம்பர் 14 – ஆத்திரேலியா, சிட்னி நகரில் பொண்டாய் கடற்கரையில் நிகழ்ந்த யூதர்களின் அனுக்கா கொண்டாட்டத்தின் போது இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 43 பேர் காயமடைந்தனர்.[63][64]
- திசம்பர் 26 – இசுரேல் முதலாவது நாடாக சோமாலிலாந்தை அங்கீகரித்தது.[65]
இறப்புகள்
[தொகு]- சனவரி 4 – இராசகோபாலன் சிதம்பரம், இந்திய அணுக்கரு இயற்பியலாளர்[66] (பி. 1936)
- சனவரி 9 – பி. ஜெயச்சந்திரன், பின்னணிப் பாடகர் (பி. 1944)
- சனவரி 10 – அந்தனி ஜீவா, இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1944)
- சனவரி 17 – குழந்தை ம. சண்முகலிங்கம், ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1931)
- சனவரி 17 – சிவா பசுபதி, இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் (பி. 1928)
- சனவரி 29 – மாவை சேனாதிராசா, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)
- பெப்ரவரி 4 – புஷ்பலதா, தென்னிந்திய நடிகை
- ஏப்ரல் 9 – குமரி அனந்தன், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர் (பி. 1933)
- ஏப்ரல் 21 – திருத்தந்தை பிரான்சிசு (பி. 1936)
- ஏப்ரல் 25 – கி. கஸ்தூரிரங்கன், இந்திய விண்வெளி அறிவியலாளர் (பி. 1940)
- மே 19 – யோசப் பொன்னையா, மட்டக்களப்பு கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் (பி. 1952)
- சூன் 17 – கோ. பழனிவேல், மலேசிய-இந்திய அரசியல்வாதி (பி. 1949)
- சூலை 4 – வா. மு. சேதுராமன், தமிழறிஞர், கவிஞர் (பி. 1935)
- சூலை 15 – சரோஜாதேவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1938)
நோபல் பரிசுகள்
[தொகு]- வேதியியல் – சுசுமு கித்தகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஓமர் எம். யாகி[67]
- பொருளியல் – ஜொயெல் மோக்கிர், பீட்டர் கவிட், பிலிப் ஆகியன்[68]
- இலக்கியம் – இலாசுலோ கிராசுனகார்க்காய்[69]
- அமைதி – மரியா கொரினா மச்சாடோ[70]
- இயற்பியல் – ஜான் கிளார்க், மிசேல் தெவோரே, ஜான் எம். மார்ட்டினிசு[71]
- மருத்துவம் – மேரி எலிசபெத் புரூன்கோவ், பிரடெரிக்கு இராம்சுடெல், சிமோன் சகாகுச்சி[72]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PM Donald Tusk at the opening of the presidency: Europe is lucky(Donald Tusk na inauguracji prezydencji: Europa ma szczęście)". 3 January 2025. https://tvn24.pl/polska/polska-prezydencja-w-radzie-unii-europejskiej-oficjalna-inauguracja-przemowienie-premiera-donalda-tuska-st8245824.
- ↑ "Borders open: Bulgaria and Romania celebrate joining Schengen Area". Euronews. 1 January 2025. Retrieved 1 January 2025.
- ↑ "Liechtenstein legalizes same-sex marriage in near-unanimous vote". Politico. 17 May 2024. Archived from the original on January 1, 2025. Retrieved 1 January 2025.
- ↑ "Indonesia joins BRICS group of emerging economies". Al Jazeera (in ஆங்கிலம்). Retrieved 2025-01-09.
- ↑ "Indonesia is admitted to the BRICS bloc of developing nations". AP News (in ஆங்கிலம்). 2025-01-06. Retrieved 2025-01-09.
- ↑ "China earthquake: Dozens dead as tremor strikes Tibet". BBC News. 7 January 2025. https://www.bbc.co.uk/news/articles/c3rqg95n9n1o.
- ↑ "Los Angeles wildfires approach Hollywood sign, with Sunset Boulevard 'in ruins'". BBC News (BBC News). 7 January 2025. https://www.bbc.co.uk/news/live/c5y81zyp1ext. பார்த்த நாள்: 9 January 2025.
- ↑ "2024 first year to pass 1.5C global warming limit". BBC News (BBC News). 10 January 2025. https://www.bbc.co.uk/news/articles/cd7575x8yq5o. பார்த்த நாள்: 11 January 2025.
- ↑ "srael, Hamas reach ceasefire agreement designed to end 15-month Gaza war, official says". Reuters.
- ↑ "'We deserve life': Gaza ceasefire comes into force after 15 months of war". Al Jazeera. Retrieved 2025-01-20.
- ↑ "Scores killed as hotel engulfed by flames in Turkish ski resort". BBC News. 21 January 2025. https://www.bbc.com/news/articles/c4g375x0zpwo.
- ↑ Tanakasempipat, Patpicha (2024-09-25). "Same-Sex Marriage Legalized in Thailand, Starting in January". TIME (in ஆங்கிலம்). Archived from the original on January 1, 2025. Retrieved 2025-01-01.
- ↑ "Live updates: Plane crash near Washington, DC; Reagan National Airport takeoffs and landings halted". CNN (in ஆங்கிலம்). 2025-01-30. Retrieved 2025-01-30.
- ↑ "What we know so far about Washington DC plane crash". BBC News. 30 January 2025. Retrieved 30 January 2025.
- ↑ Nicaragua's Ortega expands power as reforms win final approval
- ↑ "US, Russia agree to restore diplomatic missions as first step in Ukraine war talks" (in en). Reuters. February 18, 2025. https://www.reuters.com/world/us-russia-agree-restore-diplomatic-missions-first-step-ukraine-war-talks-2025-02-18/.
- ↑ "Thutmose II: First pharaoh's tomb found in Egypt since Tutankhamun's". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2025-02-19. Retrieved 2025-02-19.
- ↑ Shawkat, Ahmed (2025-02-18). "Egypt announces first discovery of a royal tomb since King Tutankhamun's was found over a century ago - CBS News". www.cbsnews.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-19.
- ↑ "Striking images show Blue Ghost Mission 1's successful moon landing". The Guardian. Agence France-Presse. 2025-03-02. https://www.theguardian.com/science/2025/mar/02/private-firefly-aerospace-spacecraft-blue-ghost-makes-successful-upright-moon-landing.
- ↑ "US firm Firefly achieves its first moon landing with Blue Ghost spacecraft". Al Jazeera. Retrieved 2025-03-03.
- ↑ "Sudan takes UAE to world court over 'complicity in genocide'". BBC. 2025-03-03. Retrieved 2025-03-06.
- ↑ "More than 1,000 killed in Syrian crackdown on Alawite region, war monitor says". Reuters. 8 March 2025. Retrieved 9 March 2025.
- ↑ Esguerra, Darryl John (March 11, 2025). "ICC warrant served: Palace says Duterte now under police custody". Philippine News Agency. Retrieved March 11, 2025.
- ↑ El-Bawab, Nadine; Pereira, Ivan; Moore, Jack; Hutchinson, Bill; Sarnoff, Leah. "Tornado outbreak live updates: 40 dead in cross-country storm system". ABC News. Retrieved 2025-04-10.
- ↑ "North Macedonia nightclub fire claims more than 50 lives in Kocani". March 16, 2025.
- ↑ "Israel kills 71 in predawn attacks on Gaza; Netanyahu warns of 'fierce' war". Al Jazeera. 18 March 2025.
- ↑ "Powerful quake in Southeast Asia kills several, Myanmar declares state of emergency". www.reuters.com. 2025-03-28. Retrieved 2025-03-28.
- ↑ Josh Dinner (2025-04-01). "SpaceX launches private Fram2 astronauts on historic spaceflight over Earth's poles". Space.com (in ஆங்கிலம்). Retrieved 2025-04-01.
- ↑ Tanno, Sophie (2025-04-10). "More than 200 dead after Dominican Republic nightclub disaster, as search for survivors ends". CNN (in ஆங்கிலம்). Retrieved 2025-04-10.
- ↑ "Scientists find 'strongest evidence yet' of life on distant planet". BBC News (in அமெரிக்க ஆங்கிலம்). 17 April 2025. Retrieved 17 April 2025.
- ↑ "Gunmen kill at least 26 in Indian-administered Kashmir: Police". Al Jazeera (in ஆங்கிலம்). Retrieved 22 April 2025.
- ↑ Adler, Nils. "Albanese's Labor Party projected to win as Australia vote count under way". Al Jazeera (in ஆங்கிலம்). Retrieved 2025-05-03.
- ↑ Koh, Fabian (15 April 2025). "GE2025: Parliament dissolved ahead of General Election; Nomination Day on Apr 23". CNA. Retrieved 15 April 2025.
- ↑ "Germany's Merz elected chancellor in second round vote". Al Jazeera (in ஆங்கிலம்). Retrieved 2025-05-06.
- ↑ India says it has launched strikes on Pakistan and Pakistan-administered Kashmir
- ↑ Burack, Emily (21 April 2025). "When Does the Papal Conclave Begin?". Town & Country (magazine). Retrieved 21 April 2025.
- ↑ "Kurdish group PKK says it is laying down arms and disbanding". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2025-05-12. Retrieved 2025-05-16.
- ↑ "Ukraine's audacious drone attack sends critical message to Russia - and the West". BBC News. 1 சூன் 2025. Retrieved 2 சூன் 2025.
- ↑ Khanna, Sumit (2025-06-24). "Authorities identify all but one of 260 victims of Air India plane crash" (in en). Reuters. https://www.reuters.com/business/aerospace-defense/authorities-identify-all-one-260-victims-air-india-plane-crash-2025-06-24/.
- ↑ "Air India crash: DNA testing complete, final death toll stands at 260". The Economic Times. 2025-06-29. https://economictimes.indiatimes.com/news/india/air-india-crash-dna-testing-complete-final-death-toll-stands-at-260/articleshow/122138572.cms?from=mdr.
- ↑ "Israel targets Iran's nuclear sites, killing military commanders and scientists in major attack". BBC News. BBC. 13 June 2025. Retrieved 13 June 2025.
- ↑ Fassihi, Farnaz; Nauman, Qasim; Boxerman, Aaron; Kingsley, Patrick; Bergman, Ronen (2025-06-13). "Israel Strikes Iran's Nuclear Program, Killing Top Military Officials: Live Updates" (in en-US). The New York Times. https://www.nytimes.com/live/2025/06/12/world/israel-iran-us-nuclear.
- ↑ Nagourney, Eric; Haberman, Maggie (June 21, 2025). "U.S. Enters War With Iran, Striking Fordo Nuclear Site: Live Updates". The New York Times. https://www.nytimes.com/live/2025/06/21/world/iran-israel-trump.
- ↑ "Iran launches missiles at US bases in Qatar and Iraq in response to strikes, state media reports". BBC News. June 23, 2025. https://www.bbc.co.uk/news/live/cn7ze4vmk2pt.
- ↑ "India, Poland and Hungary make spaceflight comeback with ISS mission". The Guardian (in ஆங்கிலம்). 25 June 2025. Retrieved 27 June 2025.
- ↑ "Texas Flood Live Updates: Summer Camp Says 27 Girls and Staff Killed, With 11 Still Missing". The New York Times. 7 July 2025. Retrieved 7 July 2025.
- ↑ "Top UN court says countries can sue each other over climate change". BBC News. BBC. 23 July 2025. Retrieved 24 July 2025.
- ↑ Osborn, Andrew; Stolyarov, Gleb (24 July 2025). "Russian plane crashes in Russia's far east, nearly 50 people on board feared dead". ராய்ட்டர்ஸ். https://www.reuters.com/business/aerospace-defense/russian-plane-missing-with-around-50-people-board-amur-region-interfax-says-2025-07-24/.
- ↑ "Thailand-Cambodia military exchanges could lead to war, acting Thai PM says" (in en-AU). ABC News. 2025-07-25. https://www.abc.net.au/news/2025-07-25/thailand-cambodia-border-conflict-calls-for-peace/105570648.
- ↑ "Powerful quake in Russia's Far East causes tsunami, Japan and Hawaii order evacuations". Reuters. Retrieved 30 July 2025.
- ↑ "Azerbaijan and Armenia sign peace deal at White House that creates a 'Trump Route' in region". தி கார்டியன். 9 August 2025. https://www.theguardian.com/world/2025/aug/09/azerbaijan-and-armenia-sign-peace-deal-at-white-house-that-creates-a-trump-route-in-region.
- ↑ Ramaswamy, Swapna Venugopal; Vanden Brook, Tom. "Trump-Putin meeting: Sprawling Army base that has hosted dignitaries is backdrop for talks". USA Today. Retrieved 16 August 2025.
- ↑ "Afghan survivors struggle in the wake of deadly earthquake". Al Jazeera. Retrieved 7 September 2025.
- ↑ Mohamed, Edna. "Nepal protests updates: PM Oli resigns, parliament torched, airport shut". Al Jazeera. Retrieved 10 September 2025.
- ↑ "UK, Canada and Australia announce formal recognition of Palestinian state" (in en). BBC News. 2025-09-21. https://www.bbc.co.uk/news/live/cpw1qkyke4nt.
- ↑ "France becomes latest nation to recognise Palestinian state" (in en). BBC News. 2025-09-22. https://www.bbc.co.uk/news/live/cpw1qkyke4nt?post=asset%3A98abf853-7f15-43f9-be57-8b3c7d692f5b#post.
- ↑ "Trump says Israel and Hamas have agreed to first phase of Gaza peace deal, paving way for ceasefire". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2025-10-09. Retrieved 2025-10-09.
- ↑ Rabary, Lovasoa; Cocks, Tim; Paravicini, Giulia (2025-10-13). "Madagascar's president has left the country after Gen Z protests, officials say". ராய்ட்டர்ஸ். Retrieved 2025-10-13.
- ↑ "All 20 living hostages now handed over as Trump set to address Israeli parliament". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2025-10-13. Retrieved 2025-10-13.
- ↑ "Bangladesh: Sheikh Hasina sentenced to death over student protests". www.bbc.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2025-11-17. Retrieved 2025-11-19.
- ↑ Ganglani, Jay (2025-11-25). "Move aside Tokyo, the world has a new largest city" (in en). NBC News. https://www.nbcnews.com/world/asia/jakarta-worlds-largest-city-tokyo-most-populated-dhaka-new-un-report-rcna245798.
- ↑ "Death toll from Sri Lanka landslides and floods rises to 69". Al Jazeera. 28 November 2025. Retrieved 30 November 2025.
- ↑ "Bondi beach shooting live updates: two people in custody as PM urges public to follow police guidance amid 'shocking and distressing' scenes". தி கார்டியன். 14 December 2025. https://www.theguardian.com/australia-news/live/2025/dec/14/nsw-police-responding-to-reports-of-shooting-at-sydneys-bondi-beach-follow-latest.
- ↑ "'I have no husband': Victims named after 16 killed in Bondi shooting". NZ Herald. Retrieved 2025-12-14.
- ↑ "Israel becomes first country to formally recognise Somaliland as independent state". ராய்ட்டர்ஸ். 26 December 2025. Retrieved 26 December 2025.
- ↑ Nuclear scientist Dr. Rajagopala Chidambaram passes away
- ↑ "Nobel Prize in Chemistry 2025". நோபல் பரிசு. October 8, 2025. Retrieved October 8, 2025.
- ↑ "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2025". நோபல் பரிசு. October 13, 2025. Retrieved October 13, 2025.
- ↑ "Nobel Prize in Literature 2025". நோபல் பரிசு. October 9, 2025. Retrieved October 9, 2025.
- ↑ "Nobel Peace Prize 2025". நோபல் பரிசு. October 10, 2025. Retrieved October 10, 2025.
- ↑ "Nobel Prize in Physics 2025". நோபல் பரிசு. October 7, 2025. Retrieved October 7, 2025.
- ↑ "Nobel Prize in Physiology or Medicine 2025". நோபல் பரிசு. October 6, 2025. Retrieved October 6, 2025.